வருவாய் அதிகரித்தும் பலன் இல்லை.. ரூ.331 கோடி இழப்பை சந்தித்த டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ்
டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ் நிறுவனத்துக்கு 2022 ஜூன் காலாண்டில் ரூ.331.09 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ் நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ் நிறுவனத்துக்கு 2022 ஜூன் காலாண்டில் ரூ.331.09 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2021 ஜூன் காலாண்டில் டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ் நிறுவனம் ரூ.331.60 கோடியை லாபமாக ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2022 ஜூன் காலாண்டில் டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,154.78 கோடியாக உயர்ந்துள்ளது. 2021 ஜூன் காலாண்டிலெ் டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ் நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.1,726.82 கோடி ஈட்டியிருந்தது. 2022 ஜூன் காலாண்டில் டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் செலவினம் ரூ.1,282.59 கோடியிலிருந்து ரூ.2,489.58 கோடியாக உயர்ந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.70 சதவீதம் குறைந்து ரூ.580.55ஆக இருந்தது.

