சன் பார்மா லாபம் ரூ.2,260 கோடி.. வருவாய் 14 சதவீதம் வளர்ச்சி..

 
வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சே…. சன் பார்மா…

சன் பார்மா நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில்  நிகர லாபமாக ரூ.2,260 கோடி ஈட்டியுள்ளது. 

மருந்து நிறுவனமான சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் (சன் பார்மா) தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. சன் பார்மா நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில்  நிகர லாபமாக ரூ.2,260 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 8.2 சதவீதம் அதிகமாகும். 

சன் பார்மா

2022 செப்டம்பர் காலாண்டில் சன் பார்மா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.10,952.3 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 13.8 சதவீதம் அதிகமாகும். 2022 செப்டம்பர் காலாண்டில் சன் பார்மா நிறுவனம் அன்னிய செலாவணி தொடர்பான இழப்பாக ரூ.240 கோடியை சந்தித்துள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டில் ரூ.76 கோடியாக இருந்தது.

சன் பார்மா

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, சன் பார்மா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.43 சதவீதம் குறைந்து ரூ.1,039.50ஆக இருந்தது.