ஆகஸ்ட் மாதத்தில் பங்குச் சந்தைகளுக்கு 3 தினங்கள் விடுமுறை.. மொத்தம் 20 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம்
Sun, 31 Jul 20221659222056000

வரும் ஆகஸ்ட் மாதத்தில் பங்குச் சந்தைகளுக்கு 3 தினங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டு மொத்தத்தில் 20 தினங்கள் மட்டுமே நடைபெறும்.
இந்திய பங்குச் சந்தைகளில் பொதுவாக திங்கள் முதல் வெள்ளி வரை பங்கு வர்த்தகம் நடைபெறும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நடைபெறாது. அதேசமயம் குடியரசு தினம், சுதந்திர தினம், தீபாவளி உள்ளிட்ட முக்கிய தினங்கள் வர்த்தக தினங்களில் வந்தால் அன்று பங்குச் சந்தைகள் செயல்படாது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் மாதம் மொத்தம் 3 தினங்கள் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை தினங்கள்
ஆகஸ்ட் 9 மொஹரம்
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்
ஆகஸ்ட் 31 விநாயகர் சதுர்த்தி
ஆக, வரும் ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 20 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும்.