பிரதமர் மோடி குருநானக் ஜெயந்தி வாழ்த்து.. பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை..

 
குரு நானக் ஜெயந்தி

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குருநானக் ஜெயந்தியை இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை 

இந்திய பங்குச் சந்தைகளில் பொதுவாக திங்கள் முதல் வெள்ளி வரை பங்கு வர்த்தகம் நடைபெறும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நடைபெறாது. அதேசமயம் குடியரசு தினம், சுதந்திர தினம், தீபாவளி உள்ளிட்ட முக்கிய தினங்கள் வர்த்தக தினங்களில் வந்தால் அன்று பங்குச் சந்தைகள் செயல்படாது.  குருநானக் ஜெயந்திக்கும் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடுவது வாடிக்கை.

விடுமுறை

குருநானக் பிறந்த தினத்தை குரு நானக் ஜெயந்தி விழாவாக உலகம் முழுவதிலும் உள்ள சீக்கியர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குருநானக் ஜெயந்தி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று  பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பங்குச் சந்தைகள் வழக்கம் போல் செயல்படும். இந்த வாரம் பங்கு வர்த்தகம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே நடைபெறும்.  மேலும் இந்த மாதம் மொத்தம் 21 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும்.

மோடி

பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஸ்ரீ குருநானக் தேவ் ஜியின் பிரகாஷ் புரபிற்கு வாழ்த்துக்கள். அவருடைய உன்னத போதனைகள் ,நீதியும் கருணையும் கொண்ட சமுதாயத்தை கட்டியெழுப்பும் முயற்சியில் நம்மை தொடர்ந்து வழிநடத்தட்டும் என பதிவு செய்து இருந்தார்.