நவம்பர் மாதத்தில் பங்குச் சந்தைகளுக்கு 1 நாள் விடுமுறை.. மொத்தம் 21 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம்

 
விடுமுறை

நடப்பு நவம்பர் மாதத்தில் பங்குச் சந்தைகளுக்கு 1 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த மாதம் மொத்தம் 21 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும்.

இந்திய பங்குச் சந்தைகளில் பொதுவாக திங்கள் முதல் வெள்ளி வரை பங்கு வர்த்தகம் நடைபெறும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நடைபெறாது. அதேசமயம் குடியரசு தினம், சுதந்திர தினம், தீபாவளி உள்ளிட்ட முக்கிய தினங்கள் வர்த்தக தினங்களில் வந்தால் அன்று பங்குச் சந்தைகள் செயல்படாது.  குருநானக் ஜெயந்திக்கும் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடுவது வாடிக்கை.

குருநானக் ஜெயந்தி

இந்த ஆண்டு குருநானக் ஜெயந்தி வரும் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆகையால் நவம்பர் 8ம் தேதி (அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை) பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாதம் மொத்தம் 21 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும்.