எஸ்.பி.ஐ. லாபம் ரூ.13,264 கோடி... வட்டி வருவாய் 13 சதவீதம் வளர்ச்சி..

 
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

எஸ்.பி.ஐ. 2022 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.13,264 கோடி ஈட்டியுள்ளது. 

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ.) தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. எஸ்.பி.ஐ. 2022 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.13,264 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 74 சதவீதம் அதிகமாகும். மேலும் நிபுணர்களின் மதிப்பீட்டைக் காட்டிலும் எஸ்.பி.ஐ.யின் நிகர லாபம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

2022 செப்டம்பர் காலாண்டில் எஸ்.பி.ஐ. வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.35,183 கோடியாக உள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 12.83 சதவீதம் அதிகமாகும். கடந்த செப்டம்பர் காலாண்டில் எஸ்.பி.ஐ.யின் மொத்த வாராக் கடன் 3.52 சதவீதமாக குறைந்துள்ளது. இது 2011-12ம் நிதியாண்டு முதல் இதுவரையிலான காலத்தில் இந்த இல்லாத குறைந்த அளவாகும். 2021 செப்டம்பர் காலாண்டில் எஸ்.பி.ஐ.யின் மொத்த வாராக் கடன்  4.90 சதவீதமாக இருந்தது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, எஸ்.பி.ஐ. பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் சதவீதம் 3.44 சதவீதம் உயர்ந்து ரூ.614.20ஆக இருந்தது.