பவர் கிரிட் கார்ப்பரேஷன் லிமிடெட் லாபம் ரூ.3,650 கோடி.. வருவாய் 9 சதவீதம் வளர்ச்சி..

 
பவர் கிரிட் கார்ப்பரேஷன் லிமிடெட்

பவர் கிரிட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,650 கோடி ஈட்டியுள்ளது. 

மத்திய அரசுக்கு சொந்தமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. பவர் கிரிட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,650 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 8 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,376 கோடி ஈட்டியிருந்தது.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் லிமிடெட்

2022 செப்டம்பர் காலாண்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் வருவாயாக ரூ.11,151 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகமாகும். 2021 செப்டம்பர் காலாண்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.10,267 கோடி ஈட்டியிருந்தது.

அரசு நிறுவனம்தான்….வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சு… பவர் கிரிட் லாபம் ரூ.2,048.42 கோடி

கடந்த ஒராண்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன பங்கு 22  சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த திங்கட்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, பவர் கிரிட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.82 சதவீதம் உயர்ந்து ரூ.228.00ஆக இருந்தது.