பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் செலவினம் ரூ.2,642 கோடி.. லாபம் 64 சதவீதம் வளர்ச்சி..

 
பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.307 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.8.50 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.357.52 கோடி ஈட்டியுள்ளது.

பசைகள், சீலண்டுகள் மற்றும் கட்டுமான ரசாயனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.357.52 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 64.27 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.217.64 கோடி ஈட்டியிருந்தது.

காலாண்டு நிதி நிலை முடிவுகள்

2022 ஜூன் காலாண்டில் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.3,101.11 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 60.11 சதவீதம் அதிகமாகும். 2021 ஜூன் காலாண்டில் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1,936.79 கோடி ஈட்டியிருந்தது. 2022 ஜூன் காலாண்டில் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.2,641.98 கோடியாக உயர்ந்துள்ளது.

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.307 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.8.50 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை 1.65 சதவீதம் உயர்ந்து ரூ.2,866.40ஆக இருந்தது.