பைசர் நிறுவனம் வருவாய் சரிவு.. லாபம் ரூ.33 கோடி...

 
பைசர்

பைசர் நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.33 கோடி ஈட்டியுள்ளது. 

மருந்து நிறுவனமான பைசர் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. பைசர் நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.33 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் மிகவும் குறைவாகும். 2021 ஜூன் காலாண்டில் பைசர்  நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.200 கோடி ஈட்டியிருந்தது.

பைசர்

2022 ஜூன் காலாண்டில் பைசர்  நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.593 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் குறைவாகும். 2021 காலாண்டில் பைசர்  நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.749 கோடி ஈட்டியிருந்தது. கடந்த ஜூன் காலாண்டில் பைசர் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாயும், லாபமும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பைசர்

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, பைசர் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.38 சதவீதம் குறைந்து ரூ.4,191.15ஆக இருந்தது.