லாபம் ஈட்ட முடியாமல் திணறும் பேடிஎம்.. செப்படம்பர் காலாண்டில் ரூ.572 கோடி நஷ்டம்

 
ரூ.2,597 கோடி நஷ்டம்.. ஆனாலும் 2022க்குள் எப்படியும் லாபம் சம்பாதித்து விடுவோம்… பேடிஎம் உறுதி

பேடிஎம் (ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்) 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.571.5 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. 

மொபைல் பேமண்ட்ஸ் மற்றும் நிதி சேவைகள் நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தை நடத்தி வரும் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது.  பேடிஎம் (ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்) 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.571.5 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் அதிகமாகும். அந்த காலாண்டில் பேடிஎம் ஒட்டு மொத்த அளவில் ரூ.473.50 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

ரூ.2,597 கோடி நஷ்டம்.. ஆனாலும் 2022க்குள் எப்படியும் லாபம் சம்பாதித்து விடுவோம்… பேடிஎம் உறுதி

2022 செப்டம்பர் காலாண்டில் பேடிஎம். நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1,914 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 76.2 சதவீதம் அதிகமாகும். அதேசமயம் 2022 ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும்போது கடந்த செப்டம்பர் காலாண்டில் பேடிஎம் நிறுவனத்தின் ஒட்டு மொத்த அளவில் செயல்பாட்டு வாயிலான வருவாய் 14 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.

ரூ.2,597 கோடி நஷ்டம்.. ஆனாலும் 2022க்குள் எப்படியும் லாபம் சம்பாதித்து விடுவோம்… பேடிஎம் உறுதி

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, பேடிஎம் (ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்)  நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.12 சதவீதம் உயர்ந்து ரூ.633.90ஆக இருந்தது.