நைகா நிறுவனத்தின் வருவாய் 41 சதவீதம் வளர்ச்சி.. லாபம் ரூ.5 கோடி...

 
நைகா

நைகா நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.4.55 கோடி ஈட்டியுள்ளது. 

அழகு, ஆரோக்கியம், பேஷன் சம்பந்தபட்ட பொருட்களை ஆன்லைன் மற்றும் ரீடெய்ல் கடைகள் வாயிலாக விற்பனை செய்து வரும் நைகா நிறுவனம் அண்மையில் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. நைகா நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.4.55 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 33 சதவீதம் அதிகமாகும். 2021 ஜூன் காலாண்டில் நைகா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3.41 கோடி ஈட்டியிருந்தது.

நைகா

நைகா நிறுவனத்தின் கடந்த ஜூன் காலாண்டு லாபம் முந்தைய மார்ச் காலாண்டைக் காட்டிலும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 2022 ஜூன் காலாண்டில் நைகா நிறுவனம் வருவாயாக ரூ.1,148.4 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 41 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் நைகா நிறுவனம் வருவாயாக ரூ.817 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது. 

நைகா

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, நைகா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.87 சதவீதம் குறைந்து ரூ.1,335.70ஆக இருந்தது.