வருவாய் அமோகம்... மைண்ட்ரீ லாபம் ரூ.473 கோடி.. பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் பரிந்துரை

 
நிதியாண்டை கெத்தாக தொடங்கிய மைண்ட்ரீ நிறுவனம்.. ஜூன் காலாண்டில் நிகர லாபம் ரூ.343 கோடி…

மைண்ட்ரீ நிறுவனம் 2022 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில்  நிகர  லாபமாக ரூ.473.1 கோடி  ஈட்டியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த மைண்ட்ரீ நிறுவனம் தனது கடந்த  மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. மைண்ட்ரீ நிறுவனம் 2022 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில்  நிகர  லாபமாக ரூ.473.1 கோடி  ஈட்டியுள்ளது. இது 2021 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 49.1 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் மைண்ட்ரீ நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.317.3  கோடி ஈட்டியிருந்தது.

நிதியாண்டை கெத்தாக தொடங்கிய மைண்ட்ரீ நிறுவனம்.. ஜூன் காலாண்டில் நிகர லாபம் ரூ.343 கோடி…

2022 மார்ச் காலாண்டில் மைண்ட்ரீ நிறுவனத்தின்   செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.2,897.4 கோடியாக உள்ளது. இது 2021 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 37.4 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் மைண்ட்ரீ நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.2,109.3 கோடி ஈட்டியிருந்தது. 2022 மாா்ச் காலாண்டில் டாலர் அடிப்படையில் இந்நிறுவனத்தின்  வருவாய்  33.2 சதவீதம் உயர்ந்து 38.38 கோடி டாலராக அதிகரித்துள்ளது. 2022 மார்ச் இறுதி நிலவரப்படி, இந்நிறுவனத்திடம் 276 ஆக்டிவ் வாடிக்கையாளர்கள் உள்ளனர். 

வருவாய் அதிகரித்தும் லாபத்தில் சரிவு.. மைண்ட்ரீ லாபம் ரூ.317 கோடியாக குறைந்தது

மைண்ட்ரீ நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கடந்த நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.27 இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது மைண்ட்ரீ நிறுவனத்தின் பங்கு விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 8.13 சதவீதம் குறைந்து ரூ.3,638.70ஆக இருந்தது.