வருவாய் 36 சதவீதம் வளர்ச்சி.. மைண்ட்ரீ லாபம் ரூ.472 கோடி...

 
நிதியாண்டை கெத்தாக தொடங்கிய மைண்ட்ரீ நிறுவனம்.. ஜூன் காலாண்டில் நிகர லாபம் ரூ.343 கோடி…

மைண்ட்ரீ நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில்   நிகர  லாபமாக ரூ.471.60 கோடி  ஈட்டியுள்ளது. 

தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த மைண்ட்ரீ நிறுவனம் தனது கடந்த  ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. மைண்ட்ரீ நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில்   நிகர  லாபமாக ரூ.471.60 கோடி  ஈட்டியுள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 37.3 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் மைண்ட்ரீ நிறுவனம்  நிகர லாபமாக ரூ.343.40  கோடி ஈட்டியிருந்தது.

வருவாய் அதிகரித்தும் லாபத்தில் சரிவு.. மைண்ட்ரீ லாபம் ரூ.317 கோடியாக குறைந்தது

2022 ஜூன் காலாண்டில் மைண்ட்ரீ நிறுவனத்தின்   செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.3,121.10 கோடியாக உள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 36.2 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் மைண்ட்ரீ நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.2,291.70 கோடி ஈட்டியிருந்தது. 2022 ஜூன் காலாண்டில் டாலர் அடிப்படையில் இந்நிறுவனத்தின்  வருவாய்  4 சதவீதம் உயர்ந்து 39.93 கோடி டாலராக அதிகரித்துள்ளது. 

வருவாய் அதிகரித்தும் லாபத்தில் சரிவு.. மைண்ட்ரீ லாபம் ரூ.317 கோடியாக குறைந்தது

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, மைண்ட்ரீ நிறுவன பங்கின் விலை முந்தை வர்த்தக தினத்தை காட்டிலும் 3.77 சதவீதம் குறைந்து ரூ.2,790.00ஆக இருந்தது.