மேக்ஸ் ஹெல்த்கேர் லாபம் ரூ.229 கோடி... வருவாய் ரூ.1,393 கோடி

 
மேக்ஸ் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட்

மேக்ஸ் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட் லிமிடெட் (மேக்ஸ் ஹெல்த்கேர்) நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.229 கோடி ஈட்டியுள்ளது.

மருத்துவமனை சங்கிலித் தொடர் நிறுவனமான மேக்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. மேக்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம்  நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.229 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 12 சதவீதம் அதிகமாகும். 2021 ஜூன் காலாண்டில் மேக்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம்  நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.205 கோடி ஈட்டியிருந்தது.

மேக்ஸ் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட்

2022 ஜூன் காலாண்டில் மேக்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம்  நிறுவனம் நிகர வருவாயாக ரூ.1,393 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் சிறிது  அதிகமாகும். அந்த  காலாண்டில் மேக்ஸ் ஹெல்த்கேர்  நிறுவனத்தின் நிகர வருவாய் ரூ.1,322 கோடியாக இருந்தது.

மேக்ஸ் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட்

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, மேக்ஸ் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட் லிமிடெட் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.39 சதவீதம் குறைந்து ரூ.378.90ஆக இருந்தது.