மேப்மைஇந்தியா லாபம் ரூ.24 கோடி... வருவாய் 50 சதவீதம் வளர்ச்சி..

 
மேப்மைஇந்தியா

மேப்மைஇந்தியா நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.24.2 கோடி ஈட்டியுள்ளது.  

மேப்மைஇந்தியா பிராண்ட் பெயரில் இயங்கும் டிஜிட்டம் வரைபட நிறுவனமான சி.இ. இன்போ சிஸ்டம்ஸ் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. மேப்மைஇந்தியா நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.24.2 கோடி ஈட்டியுள்ளது.  இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 18 சதவீதம் அதிகமாகும். 2021 ஜூன் காலாண்டில் மேப்மைஇந்தியா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.20.6 கோடி ஈட்டியிருந்தது.

மேப்மைஇந்தியா

2022 ஜூன் காலாண்டில் மேப்மைஇந்தியா நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.65 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் மேப்மைஇந்தியா  நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.43.35 கோடி ஈட்டியிருந்தது. 

மேப்மைஇந்தியா

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, மேப்மைஇந்தியா  நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.26 சதவீதம் உயர்ந்து ரூ.1,387.05ஆக இருந்தது.