மகிந்திரா அண்ட் மகிந்திரா வருவாய் அமோகம்.. லாபம் ரூ.2,773 கோடி..

 
மகிந்திரா

மகிந்திரா அண்ட் மகிந்திரா 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,773 கோடி ஈட்டியுள்ளது. 

மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. மகிந்திரா அண்ட் மகிந்திரா 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,773 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 44 சதவீதம் அதிகமாகும். 2021 செப்டம்பர் காலாண்டில் மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம்  ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,929 கோடி ஈட்டியிருந்தது.

மகிந்திரா டிராக்டர்

2022 செப்டம்பர் காலாண்டில் மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.29,870 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் அதிகமாகும். அந்த காலாண்டில் மகிந்திரா அண்ட் மகிந்திரா  நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.21,470 கோடி ஈட்டியிருந்தது.

மகிந்திரா அண்ட் மகிந்திரா

2022 செப்டம்பர் காலாண்டில் மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் மொத்தம் 1.74 லட்சம்  வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 75 சதவீதம் அதிகமாகும். மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.45 சதவீதம் குறைந்து ரூ.1,286.05ஆக இருந்தது.