எம்.ஆர்.எப். லாபம் ரூ.124 கோடி.. செலவினம் ரூ.5,567 கோடி..

 
எம்.ஆர்.எப்.

எம்.ஆர்.எப்.  நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.123.6 கோடி ஈட்டியுள்ளது

நாட்டின் முன்னணி வாகன டயர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எம்.ஆர்.எப். தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. எம்.ஆர்.எப்.  நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.123.6 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 25.35 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் எம்.ஆர்.எப். நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.165.58 கோடி ஈட்டியிருந்தது.

எம்.ஆர்.எப்.

2022 ஜூன் காலாண்டில் எம்.ஆர்.எப்.  நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.5,695.93 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் அதிகமாகும். 2021 ஜூன் காலாண்டில் எம்.ஆர்.எப்.  நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.4,183.96 கோடி ஈட்டியிருந்தது. 2022 ஜூன் காலாண்டில் எம்.ஆர்.எப். நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.5,566.63 கோடியாக உயர்ந்துள்ளது.

எம்.ஆர்.எப்.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, எம்.ஆர்.எப். நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.43 சதவீதம் குறைந்து ரூ.84,188.90ஆக இருந்தது.