எல்.ஐ.சி. லாபம் ரூ.15,952 கோடி... பிரிமீயம் வருவாய் ரூ.1.32 லட்சம் கோடி

 
எல்.ஐ.சி.

 

எல்.ஐ.சி. நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.15,952 கோடி ஈட்டியுள்ளது. 

பொதுத்துறை நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்.ஐ.சி.) தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. எல்.ஐ.சி. நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.15,952 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாகும். அந்த காலாண்டில் எல்.ஐ.சி. நிறுவனம்  நிகர லாபமாக ரூ.1,434 கோடி ஈட்டியிருந்தது.

எல்.ஐ.சி.

2022 செப்டம்பர் காலாண்டில் எல்.ஐ.சி. நிறுவனம் மறுகாப்பீட்டுச் செலவுகளை சரிசெய்த பிறகான  நிகர பிரிமீயம் வருவாயாக ரூ.1.32 லட்சம் கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும்  அதிகமாகும். 2021 செப்டம்பர் காலாண்டில் எல்.ஐ.சி. நிறுவனம் மறுகாப்பீட்டுச் செலவுகளை சரிசெய்த பிறகான நிகர பிரிமீயம் வருவாயாக ரூ.1.04 கோடி ஈட்டியிருந்தது. 

எல்.ஐ.சி.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, எல்.ஐ.சி. நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.46 சதவீதம் சரிந்து ரூ.655.10ஆக இருந்தது.