எல் அண்ட் டி லாபம் ரூ.3,621 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.22 இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை..

 
எல் அண்ட் டி

எல் அண்ட் டி நிறுவனம் 2022 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,620.69 கோடி ஈட்டியுள்ளது.

கட்டுமானம், பொறியியல், தொழில்நுட்பம் என பல வர்த்தகங்களில் ஈடுபட்டு வரும் எல் அண்ட் டி நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி  நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. எல் அண்ட் டி நிறுவனம் 2022 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,620.69 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 9.95 சதவீதம் அதிகமாகும்.2021 மார்ச் காலாண்டில் எல் அண்ட் டி நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,292.81 கோடி ஈட்டியிருந்தது.

எல் அண்ட் டி

2022 மார்ச் காலாண்டில் எல் அண்ட் டி நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் வருவாயாக ரூ.52,851 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும். 2022 மார்ச் காலாண்டில் எல் அண்ட் டி நிறுவனம் ரூ.73,941 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை பெற்றுள்ளது. இது 2021 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 46 சதவீதம் அதிகமாகும்.

எல் அண்ட் டி

எல் அண்ட் டி நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.22 இறுதி டிவிடெண்டாக வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, எல் அண்ட் டி நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.67 சதவீதம் உயர்ந்து ரூ.1,534.50ஆக இருந்தது.