இன்போசிஸ் வருவாய் 20 சதவீதம் வளர்ச்சி.. லாபம் ரூ.6,586 கோடி..

 
கணிப்புகளை தவிடு பொடியாக்கிய இன்போசிஸ்…. ஜூன் காலாண்டில் ரூ.4,233 கோடி லாபம்…

இன்போசிஸ் நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.6,586 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் இரண்டாவது பெரிய ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.6,586 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 13.4 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.5,809 கோடி ஈட்டியிருந்தது.

கணிப்புகளை தவிடு பொடியாக்கிய இன்போசிஸ்…. ஜூன் காலாண்டில் ரூ.4,233 கோடி லாபம்…

2022 டிசம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் வருவாயாக ரூ.38,318 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 20.2 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் வருவாயாக ரூ.31,867 கோடி ஈட்டியிருந்தது. 2022 டிசம்பர் 7ம் தேதி முதல் இதுவரை (நேற்று வரை) 3.13 கோடி பங்குகளை திரும்ப வாங்கியுள்ளதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது. 

இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனம் நிகர அடிப்படையில் 1,627 பணியாளர்களை பணியில் சேர்த்துள்ளது. இதனையடுத்து 2022 டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 3.46 லட்சமாக உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, இன்போசிஸ்  நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.62 சதவீதம் உயர்ந்து ரூ.1,480.55ஆக உயர்ந்தது.