இண்டஸ்இந்த் வங்கி லாபம் ரூ.1,361 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.8.50 டிவிடெண்ட் அறிவிப்பு..

 
இண்டஸ்இந்த் வங்கி

இண்டஸ்இந்த் வங்கி 2022 மார்ச் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,361.37 கோடி ஈட்டியுள்ளது. 

நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான இண்டஸ்இந்த் வங்கி தனது மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இண்டஸ்இந்த் வங்கி 2022 மார்ச் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,361.37 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 55.41 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இண்டஸ்இந்த் வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.875.95 கோடி ஈட்டியிருந்தது.

இண்டஸ்இந்த் வங்கி

2022 மார்ச் காலாண்டில் இண்டஸ்இந்த் வங்கியின் வட்டி வருவாய் ரூ.7,859.89 கோடி ஈட்டியள்ளது. இது 2021 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 5.93 சதவீதம் அதிகமாகும். அந்த காலா்ணடில் இண்டஸ்இந்த் வங்கி  வட்டி வருவாயாக ரூ.7,419.36 கோடி ஈட்டியிருந்தது. கடந்த மார்ச் காலாண்டில் இண்டஸ்இந்த் வங்கியின் மொத்த வாராக் கடன் 2.27 சதவீதமாக குறைந்துள்ளது.

இண்டஸ்இந்த் வங்கி

இண்டஸ்இந்த் வங்கியின் இயக்குனர்கள் குழு பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.8.50 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த போது, இண்டஸ்இந்த் வங்கி  பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 4.17 சதவீதம் உயர்ந்து ரூ.1,019.00ஆக இருந்தது.