அதிக விலை காரணமாக தேவை குறைந்தது.. கடந்த டிசம்பரில் ரூ.9,676 கோடிக்கு தங்கம் இறக்குமதி..

 
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

2022 டிசம்பர் மாதத்தில் அளவு அடிப்படையில் தங்கம் இறக்குமதி 20 டன்னாக குறைந்துள்ளது. 

இந்தியாவில் தங்க ஆபரண பயன்பாடு அதிகம். அதேசமயம் உள்நாட்டில் உற்பத்தி பெயரளவுக்கு உள்ளதால் தேவையை பூர்த்தி செய்வதற்காக தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கம் பயன்பாட்டில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிக விலை காரணமாக தேவை குறைந்ததால் கடந்த டிசம்பரில் தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது.

தங்கம்

இந்தியாவின் தங்கம் இறக்குமதி கடந்த டிசம்பர் மாதத்தில் 79 சதவீதம் குறைந்துள்ளது. 2022 டிசம்பர் மாதத்தில் அளவு அடிப்படையில் தங்கம் இறக்குமதி 20 டன்னாக குறைந்துள்ளது. 2021 டிசம்பர் மாதத்தில் நம் நாட்டில் 95 டன் தங்கம் இறக்குமதியாகி இருந்தது. மதிப்பு அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதத்தில் 118 கோடி டாலருக்கு (ரூ.9,676 கோடி) தங்கம் இறக்குமதியாகியுள்ளது. 2021 டிசம்பர் மாதத்தில் 473 கோடி டாலருக்கு (ரூ.38,786 கோடி) தங்கம் இறக்குமதியாகி இருந்தது. 

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

கடந்த 2022ம் ஆண்டில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 706 டன்னாக குறைந்துள்ளது. 2021ம் ஆண்டில் 1,068 கோடி டன் தங்கம் இறக்குமதியாகி இருந்தது. தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்கும் நோக்கில், 2015 நவம்பரில் பிரதமர் நரேந்திர மோடி தங்க பத்திர திட்டத்தை தொடங்கி வைத்தார். தங்கத்தை உலோகமாக வாங்குவதற்கு பதில் காகித வடிவில் (பத்திரமாக) வாங்குவதை தங்க பத்திர திட்டம். இந்த திட்டத்துக்கு வரவேற்பு இருந்தாலும், மக்கள் தங்கத்தை உலோகமாக வாங்குவதைதான் விரும்புகின்றனர்.