வருவாய் அதிகரித்தும் நஷ்டத்தை சந்தித்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்.. 3 மாதத்தில் ரூ.113 கோடி இழப்பு..

 
இந்தியா சிமெண்ட்ஸ்

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.113.26 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. 

சிமெண்ட் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் அண்மையில் தனது செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.113.26 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. 2021 செப்டம்பர் காலாண்டில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.29.75 கோடி ஈட்டியிருந்தது.

இந்தியா சிமெண்ட்ஸ்

2022 செப்டம்பர் காலாண்டில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1,327.06  கோடி ஈட்டியுள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 7.46 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1,234.85 கோடி ஈட்டியிருந்தது. 2022 செப்டம்பர் காலாண்டில்   இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மொத்த செலவினம் 27.16 சதவீதம் உயர்ந்து ரூ.1,528.01 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தியா சிமெண்ட்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும்  0.74 சதவீதம் உயர்ந்து ரூ.232.45ஆக இருந்தது.