ஐ.டி.சி. லாபம் ரூ.4,169 கோடி.. நிபுணர்களின் மதிப்பீட்டை காட்டிலும் அதிகம்..

 
ஐ.டி.சி.

ஐ.டி.சி. நிறுவனம் 2022 ஜூன்  காலாண்டில் தனிபட்ட முறையில் நிகர லாபமாக ரூ.4,169.38 கோடி ஈட்டியுள்ளது. 

சிகரெட், நுகர்பொருள் மற்றும் ஹோட்டல் என பல்வேறு துறைகளில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஐ.டி.சி. நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஐ.டி.சி. நிறுவனம் 2022 ஜூன்  காலாண்டில் தனிபட்ட முறையில் நிகர லாபமாக ரூ.4,169.38 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 38.35 சதவீதம் அதிகமாகும். 2021 ஜூன் காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனம் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.3,013.49 கோடி ஈட்டியிருந்தது.

ஐ.டி.சி. தயாரிப்புகள்

முன்னதாக ஆய்வாளர்கள்,  ஐ.டி.சி. நிறுவனம் கடந்த ஜூன்  காலாண்டில் ரூ.3,985 கோடி அளவுக்கே நிகர லாபம் ஈட்டும் என்று கணித்து இருந்தனர். ஆனால் நிபுணர்களின் மதிப்பீட்டை காட்டிலும் அதிகமாக ஐ.டி.சி.  நிகர லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2022 ஜூன் காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனம்  வருவாயாக ரூ.18,320.16  கோடி ஈட்டியுள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 41.36 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனம்  செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.12,959.15 கோடி ஈட்டியிருந்தது. 

ஐ.டி.சி.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, ஐ.டி.சி. நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.50 சதவீதம் குறைந்து ரூ.308.10ஆக இருந்தது.