இந்தியன் ஓவர்சீஸ் வங்கி லாபம் ரூ.501 கோடி.. வருவாய் ரூ.5,852 கோடி..

 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 2022 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.501 கோடி ஈட்டியுள்ளது. 

பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 2022 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.501 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 33.2 சதவீதம் அதிகமாகும். 2021 செப்டம்பர் காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிகர லாபமாக ரூ.376 கோடி ஈட்டியிருந்தது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

2022 செப்டம்பர் காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மொத்த வருவாயாக ரூ.5,852.45 கோடி ஈட்டியிருந்தது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மொத்த வருவாயாக ரூ.5,028 கோடி ஈட்டியிருந்தது. 2022 செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி,  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிகர வாராக் கடன் 2.56 சதவீதமாக இருந்தது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 5.43 சதவீதம் உயர்ந்து ரூ.21.35ஆக இருந்தது.