வாராக் கடன் குறைந்தது... ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி லாபம் ரூ.6,905 கோடி..

 
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 2022 ஜூன் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.6,905 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 2022 ஜூன் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.6,905 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.4,616 கோடி ஈட்டியிருந்தது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

2022 ஜூன் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி நிகர வட்டி வருவாயாக (வட்டி வருவாய்க்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசம்) ரூ.13,210 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 21 சதவீதம் அதிகமாகும். 2021 ஜூன் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி நிகர வட்டி வருவாயாக ரூ.10,936 கோடி ஈட்டியிருந்தது. 2022 ஜூன் 30ம் தேதி நிலவரப்படி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மொத்த வாராக் கடன் 3.60 சதவீதத்திலிருந்து 3.41 சதவீதமாக குறைந்துள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த போது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.11 சதவீதம் உயர்ந்து ரூ.800.90ஆக இருந்தது.