ஹோண்டா, ஆடி வாகன விற்பனை அமோகம்... ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை மந்தம்..

 
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் லாபம் ரூ.1,029 கோடி, இடைக்கால, சிறப்பு டிவிடெண்டுகள் அறிவிப்பு

கடந்த டிசம்பரில் ஹோண்டா மற்றும் ஆடி ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை சிறப்பாக  இருந்தது. அதேசமயம், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் வாகன விற்பனை குறைந்துள்ளது.

நாட்டின் முன்னணி இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 3,94,179 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2021 டிசம்பர் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மொத்தம் 3,94,773 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. ஆக, 2022 டிசம்பர் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை சிறிது குறைந்துள்ளது.

ஆடி கார்

ஜெர்மனை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி நிறுவனத்தின் இந்திய பிரிவான ஆடி இந்தியா, 2022 டிசம்பர் மாதத்தில் உள்நாட்டில் மொத்தம் 4,187  வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 27.14 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் ஆடி நிறுவனம் இந்தியாவில் 3,293 வாகனங்ளை மட்டுமே விற்பனை செய்து இருந்தது.

ஹோண்டா இரு சக்கர வாகனங்கள்

இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்தில் உள்நாட்டில் மொத்தம் 2,33,151 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 10.7 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் உள்நாட்டில் மொத்தம் 2,10,638 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.