ரம்ஜான் முன்னிட்டு பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை.. இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே வர்த்தகம்

 
விடுமுறை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பங்குச் சந்தைகைளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமின் 5 அடிப்படை கடமைகளில் ஒன்று ரமலான் நோன்பு இருப்பது. ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்தி விட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும். 30வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ரம்ஜான் வாழ்த்துக்கள்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பங்கு வர்த்தகம் நடைபெறாது. நாளை வழக்கம் போல் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நடைபெறும். ஆக, இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும். வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.