கடந்த ஆகஸ்டில் ஹீரோ, ராயல் என்பீல்டு, டாடா நிறுவனங்களின் வாகன விற்பனை வளர்ச்சி

 
ஹீரோ மோட்டோகார்ப்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப், ராயல் என்பீல்டு மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை அதிகரித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 4,62,608 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2021ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் 1.92 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மொத்தம் 4,53,879 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

ராயல் என்பீல்டு

மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 70,112 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 53 சதவீதம் அதிகமாகும். 2021 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் ராயல் என்பீல்டு நிறுவனம் 45,860 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

டாடா மோட்டார்ஸ்

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் (உள்நாடு மற்றும் ஏற்றுமதி)  மொத்தம் 78,843 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் 36 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தம் 57,995 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.