ஹீரோ மோட்டோகார்ப் லாபம் ரூ.716 கோடி... 3 மாதத்தில் 14.28 லட்சம் வாகனங்கள் விற்பனை

 
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் லாபம் ரூ.1,029 கோடி, இடைக்கால, சிறப்பு டிவிடெண்டுகள் அறிவிப்பு

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.716.07 கோடி ஈட்டியுள்ளது. 

நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.716.07 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 10 சதவீதம் குறைவாகும். 2021 செப்டம்பர் காலாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.794.40 கோடி ஈட்டியிருந்தது.

ஹீரோ மோட்டோகார்ப்

2022 செப்டம்பர் காலாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.9,075.35 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 7.4 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.8,453.40 கோடி ஈட்டியிருந்தது. 2022 செப்டம்பர் காலாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மொத்தம் 14.28 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப்

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.19 சதவீதம் குறைந்து ரூ.2,588.20ஆக இருந்தது