எச்.டி.எப்.சி. வட்டி வருவாய் 24 சதவீதம் வளர்ச்சி.. லாபம் ரூ.4,454 கோடி..

 
ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம்

எச்.டி.எப்.சி. நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.4,454.24 கோடி ஈட்டியுள்ளது.

ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனமான ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் (எச்.டி.எப்.சி.) தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. எச்.டி.எப்.சி. நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.4,454.24 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 17.8 சதவீதம் அதிகமாகும்.

ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம்

2022 செப்டம்பர் காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனம் மொத்த வட்டி வருவாயாக ரூ.13,142.93  கோடி ஈட்டியுள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 24.2 சதவீதம் அதிகமாகும். 2022 செப்டம்பர் காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் ரூ.15,027.21 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டில் ரூ.12,215.95 கோடியாக இருந்தது.

ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம்

2022 செப்டம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் மொத்த வாராக் கடன்1.59 சதவீதமாக குறைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, எச்.டி.எப்.சி. நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும்  0.32 சதவீதம் குறைந்து ரூ.2,489.35ஆக இருந்தது.