வருவாய் 17 சதவீதம் வளர்ச்சி.. எச்.சி.எல். டெக்னாலஜிஸ் லாபம் ரூ.3,283 கோடி..

 
கணிப்புகளை தப்பாக்கிய எச்.சி.எல். டெக்னாலஜிஸ்… செப்டம்பர் காலாண்டில் ரூ.3,142 கோடி லாபம்..

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,283 கோடி ஈட்டியுள்ளது. 

நாட்டின் முன்னணி ஐ.டி. சேவை நிறுவனங்களில் ஒன்றான எச்.சி.எல். டெக்னாலஜிஸ் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. எச்.சி.எல். டெக்னாலஜிஸ் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,283 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 2.4 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,205 கோடி ஈட்டியிருந்தது.

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் லாபம் ரூ.3,982 கோடி… பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.4 அறிவிப்பு

2022 ஜூன் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் வருவாயாக ரூ.23,464 கோடி ஈட்டியுள்ளது.  இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 16.92 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் வருவாயாக ரூ.20,068 கோடி ஈட்டியிருந்தது. கடந்த ஜூன் காலாண்டில் மொத்தம் 205 கோடி டாலர் மதிப்புக்கு புதிய ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாக எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கணிப்புகளை தப்பாக்கிய எச்.சி.எல். டெக்னாலஜிஸ்… செப்டம்பர் காலாண்டில் ரூ.3,142 கோடி லாபம்..

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.11 சதவீதம் குறைந்து ரூ.917.75ஆக இருந்தது.