எச்.சி.எல். டெக்னாலஜிஸ் லாபம் ரூ.4,096 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.10 டிவிடெண்ட் அறிவிப்பு..

 
கணிப்புகளை தப்பாக்கிய எச்.சி.எல். டெக்னாலஜிஸ்… செப்டம்பர் காலாண்டில் ரூ.3,142 கோடி லாபம்..

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.4,096 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் மூன்றாவது பெரிய ஐ.டி. நிறுவனமான எச்.சி.எல். டெக்னாலஜிஸ் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.4,096 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,442 கோடி ஈட்டியிருந்தது.

எச்.சி.எல்.டெக்னாலஜிஸ்

2022 டிசம்பர் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் வருவாயாக ரூ.26,700 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் சுமார் 20 சதவீதம் அதிகமாகும். எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் புதிதாக 2,945 பணியாளர்களை பணியமர்த்தியுள்ளது. 2022 டிசம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 2.22 லட்சமாக உள்ளது. 

எச்.சி.எல். டெக்னாலஜிஸ்

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.10 டிவிடெண்ட் அறிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.62 சதவீதம் உயர்ந்து ரூ.1,071.90ஆக இருந்தது.