கிளென்மார்க் பார்மா விற்பனை 6 சதவீதம் வீழ்ச்சி.. லாபம் ரூ.211 கோடி

 
கிளென்மார்க் பார்மா

கிளென்மார்க் பார்மா நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.211 கோடி ஈட்டியுள்ளது.

மருந்து துறை நிறுவனமான கிளென்மார்க் பார்மா தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. கிளென்மார்க் பார்மா நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.211 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 31 சதவீதம் குறைவாகும். கிளென்மார்க் பார்மா நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.306.5 கோடி ஈட்டியிருந்தது.

கிளென்மார்க் பார்மா

2022 ஜூன் காலாண்டில் கிளென்மார்க் பார்மா நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.2,777 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 6.3 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் கிளென்மார்க் பார்மா நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.2,965 கோடி ஈட்டியிருந்தது. 2022 ஜூன் காலாண்டில் கிளென்மார்க் பார்மா நிறுவனத்தின் இந்திய  விற்பனை 15.5 சதவீதமும், வட அமெரிக்கா விற்பனை 10.2 சதவீதமும் குறைந்துள்ளது.

கிளென்மார்க் பார்மா

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, கிளென்மார்க் பார்மா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.12 சதவீதம் குறைந்து ரூ.369.75ஆக இருந்தது.