எவரெடி இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.22 கோடி.. செலவினம் 27 சதவீதம் அதிகரிப்பு..

 
செலவை கட்டுப்படுத்தியதால் லாபம் 3 மடங்குக்கு மேல் எகிறியது…. எவரெடி இண்டஸ்ட்ரீஸ்…

எவரெடி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.21.85 கோடி ஈட்டியுள்ளது.

பேட்டரி மற்றும் லைட் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் எவரெடி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. எவரெடி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.21.85 கோடி ஈட்டியுள்ளது. 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 27.48 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில்  எவரெடி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.30.13 கோடி ஈட்டியிருந்தது.

எவரெடி இண்டஸ்ட்ரீஸ்

2022 ஜூன் காலாண்டில் எவரெடி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய்  ரூ.335.38 கோடியாக உள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 18.87 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் எவரெடி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.282.14 கோடியை செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாயாக ஈட்டியிருந்தது. 2022 ஜூன் காலாண்டில் எவரெடி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த செலவினம் 27.16 சதவீதம் அதிகரித்து  ரூ.310.50 கோடியாக உயர்ந்துள்ளது.

செலவை கட்டுப்படுத்தியதால் லாபம் 3 மடங்குக்கு மேல் எகிறியது…. எவரெடி இண்டஸ்ட்ரீஸ்…

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, எவரெடி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.19 சதவீதம் குறைந்து ரூ.346.25ஆக இருந்தது.