2வது மாதமாக டிசம்பரில் சில்லரை விலை பணவீக்கம் குறைந்தது.. வட்டி உயர்வு நடவடிக்கையை ரிசர்வ் வங்கி கைவிடுமா?

 
உணவு பொருட்கள் மற்றும் காய்கறி விலை குறைவாம்…. அதனால மொத்த விலை பணவீக்கம் குறைஞ்சு போச்சாம்

2022 டிசம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5.72 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் மிகக் குறைவாகும். மேலும் கடந்த நவம்பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 7.1 சதவீதம் உயர்ந்துள்ளது

2022 டிசம்பர் மாத  சில்லரை விலை பணவீக்கம் மற்றும் கடந்த நவம்பர் மாத தொழில் துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரங்களை  மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. கடந்த டிசம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 12 மாதங்களில் இல்லாத அளவுக்கு  5.72 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5.88 சதவீதமாக இருந்தது. 2022 ஏப்ரல்  மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் சுமார் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.99  சதவீதமாக உயர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரிசர்வ் வங்கி

தொடர்ந்து இரண்டாவது முறையாக  சில்லரை விலை பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ள சில்லரை விலை பணவீக்கத்துக்கான அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை காட்டிலும்  குறைந்துள்ளது. இதனால், ரிசர்வ் வங்கி எதிர்வரும் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் வட்டி விகித உயர்வு நடவடிக்கையை நிறுத்தி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்துறை

கடந்த நவம்பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 7.1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த டிசம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் மற்றும் நவம்பர் மாத தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரங்கள் பங்குச் சந்தை முடிவடைந்த பிறகு வெளியானதால், அவற்றின் தாக்கம் வரும் இன்றைய பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.