கோல் இந்தியா லாபம் ரூ.6,044 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.15 இடைக்கால டிவிடெண்ட் அறிவிப்பு

 
நிலக்கரி விற்று ரூ.4,586 கோடி லாபம் பார்த்த கோல் இந்தியா.. பங்கு ஒன்றுக்கு ரூ.3.50 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

கோல் இந்தியா நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் லாபமாக ரூ.6,044 கோடி ஈட்டியுள்ளது. 

நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. கோல் இந்தியா நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் லாபமாக ரூ.6,044 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 106 சதவீதம் அதிகமாகும். 2022 செப்டம்பர் காலாண்டில்  கோல் இந்தியா நிறுவனத்தின் ஒட்டு மொத்த அளவில் செயல்பாட்டு வாயிலான வருவாய் 28.1  சதவீதம் உயர்ந்து ரூ.29,838 கோடியாக அதிகரித்துள்ளது.

கோல் இந்தியா

2022 செப்டம்பர் காலாண்டில் கோல் இந்தியா நிறுவனத்தின் கச்சா நிலக்கரி உற்பத்தி 15.92 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2021 செப்டம்பர் காலாண்டில் கோல் இந்தியா நிறுவனம் 12.58 கோடி டன் கச்சா நிலக்கரி உற்பத்தி செய்து இருந்தது. 2022 செப்டம்பர் காலாண்டில் கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி விற்பனை 14.73 கோடி டன்னிலிருந்து 15.45 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.

நிலக்கரி விற்று ரூ.4,586 கோடி லாபம் பார்த்த கோல் இந்தியா.. பங்கு ஒன்றுக்கு ரூ.3.50 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

கோல் இந்தியா நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.15 இடைக்கால  டிவிடெண்ட் அறிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, கோல் இந்தியா நிறுவன பங்கின் விலை 0.16 சதவீதம் குறைந்து ரூ.253.25ஆக இருந்தது.