பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.491 கோடி.. வருவாய் ரூ.4,380 கோடி..

 
இயல்பு நிலைக்கு திரும்பிய நாடு.. பிஸ்கட் விற்பனை சூப்பர்.. லாபமாக ரூ.453 கோடி அள்ளிய பிரிட்டானியா

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.490.58 கோடி ஈட்டியுள்ளது.

பேக்கரி உணவு நிறுவனமான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் அண்மையில் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.490.58 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 28.47 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.381.84 கோடி ஈட்டியிருந்தது.

இயல்பு நிலைக்கு திரும்பிய நாடு.. பிஸ்கட் விற்பனை சூப்பர்.. லாபமாக ரூ.453 கோடி அள்ளிய பிரிட்டானியா

2022 செப்டம்பர் காலாண்டில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் ரூ.4,379.61 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 21.40 சதவீதம் அதிகமாகும். 2021 செப்டம்பர் காலாண்டில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாயாக ரூ.3,607.37 கோடி ஈட்டியிருந்தது. 2022 செப்டம்பர் காலாண்டில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்  நிறுவனத்தின் மொத்த செலவினம் 20.25 சதவீதம் அதிகரித்து ரூ.3,773.71 கோடியாக உயர்ந்துள்ளது.

இயல்பு நிலைக்கு திரும்பிய நாடு.. பிஸ்கட் விற்பனை சூப்பர்.. லாபமாக ரூ.453 கோடி அள்ளிய பிரிட்டானியா

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.49 சதவீதம் குறைந்து ரூ.4,104.35ஆக இருந்தது.