பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.380 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.56.50 டிவிடெண்ட்..

 
இயல்பு நிலைக்கு திரும்பிய நாடு.. பிஸ்கட் விற்பனை சூப்பர்.. லாபமாக ரூ.453 கோடி அள்ளிய பிரிட்டானியா

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் 2022 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.379.87 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் கடந்த மார்ச் காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது.  பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் 2022 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.379.87 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 4.26 சதவீதம் அதிகமாகும். 2021 மார்ச் காலாண்டில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.364.32 கோடி ஈட்டியிருந்தது.

பிரிடடானியா இண்டஸ்ட்ரீஸ்

2022 மார்ச் காலாண்டில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை வாயிலான வருவாய் ரூ.3,508.35 கோடியாக உள்ளது.. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 15.47 சதவீதம் அதிகமாகும்.  2021 மார்ச் காலாண்டில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பொருட்கள் விற்பனை வாயிலான வருவாயாக ரூ.3,038.13 கோடி ஈட்டியிருந்தது.

லாக்டவுன் காலத்திலும் பிஸ்கட் வியாபாரம் அமோகம்.. ரூ.545.70 கோடி லாபம் ஈட்டிய பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.56.50 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.01 சதவீதம் உயர்ந்து ரூ.3,310.20ஆக இருந்தது.