பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வருவாய் ரூ.1.28 லட்சம் கோடி.. ஆனாலும் ரூ.338 கோடி நஷ்டம்..

 
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.338.49 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பொதுத்துறை  நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அண்மையில் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.338.49 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2021 செப்டம்பர் காலாண்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,149.28 கோடி ஈட்டியிருந்தது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்

2022 செப்டம்பர் காலாண்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1.28 லட்சம் கோடி ஈட்டியுள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் அதிகமாகும். அந்த காலாண்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1.01 லட்சம் கோடி ஈட்டியிருந்தது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம்

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.11 சதவீதம் உயர்ந்து ரூ.310.10ஆக இருந்தது.