பஜாஜ் பைனான்ஸ் வட்டி வருவாய் 27 சதவீதம் வளர்ச்சி.. லாபம் ரூ.2,781 கோடி..

 
பஜாஜ்  பைனான்ஸ்

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,781 கோடி ஈட்டியுள்ளது.

பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் துணைநிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,781 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 88 சதவீதம் அதிகமாகும். 2021 செப்டம்பர் காலாண்டில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,481 கோடி ஈட்டியிருந்தது.

பஜாஜ் பைனான்ஸ்

2022 செப்டம்பர் காலாணடில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.9,972 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 29 சதவீதம் அதிகமாகும். 2022 செப்டம்பர் காலாண்டில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் வட்டி வருவாய் ரூ.8,509  கோடியாக உள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 27 சதவீதம் அதிகமாகும்.

பஜாஜ் பைனான்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பஜாஜ் பைனான்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.60 சதவீதம் உயர்ந்து ரூ.7,010.00ஆக இருந்தது.