ஆக்சிஸ் வங்கி லாபம் ரூ.4,125 கோடி.. வாராக்கடன் குறைந்தது..

 
ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி 2022 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.4,125.26 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கி 2022 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.4,125.26 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 91 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ஆக்சிஸ் வங்கி நிகர லாபமாக ரூ.2,160.15 கோடி ஈட்டியிருந்தது. 

வாராக் கடன் குறைப்பு…. ரூ.1,112 கோடி லாபம் ஈட்டிய ஆக்சிஸ் வங்கி …

2022 ஜூன் காலாண்டில் ஆக்சிஸ் வங்கி நிகர வட்டி வருவாயாக (வட்டி வருவாய்க்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசம்) ரூ.9,384 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 ஜூன்  காலாண்டைக் காட்டிலும் 21 சதவீதம் அதிகமாகும். 2022 ஜூன் காலாண்டு நிலவரப்படி, ஆக்சிஸ் வங்கியின் மொத்த வாராக்கடன் 2.76 சதவீதமாக குறைந்துள்ளது. இது 2022 மார்ச் காலாண்டில் 2.82 சதவீதமாக இருந்தது.

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி 2022 ஜூன் காலாண்டில் மட்டும் 9.9 லட்சம் கிரெடிட் கார்டுகளை வழங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, ஆக்சிஸ் வங்கி பங்கு விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.88 சதவீதம் உயர்ந்து ரூ.725.25ஆக இருந்தது.