ஆக்சிஸ் வங்கி வட்டி வருவாய் 32 சதவீதம் அதிகரிப்பு.. லாபம் ரூ.5,853 கோடி..

 
வாராக் கடன் குறைப்பு…. ரூ.1,112 கோடி லாபம் ஈட்டிய ஆக்சிஸ் வங்கி …

ஆக்சிஸ் வங்கி 2022 டிசம்பர் காலாண்டில் லாபமாக ரூ.5,853 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கி 2022 டிசம்பர் காலாண்டில் லாபமாக ரூ.5,853 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 62 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ஆக்சிஸ் வங்கி லாபமாக ரூ.3,614 கோடி ஈட்டியிருந்தது.

வாராக் கடன் குறைப்பு…. ரூ.1,112 கோடி லாபம் ஈட்டிய ஆக்சிஸ் வங்கி …

2022 டிசம்பர் காலாண்டில் ஆக்சிஸ் வங்கி நிகர வட்டி வருவாயாக (வட்டி வரவுக்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசம்) ரூ.11,459 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 32 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ஆக்சிஸ் வங்கி நிகர வட்டி வருவாயாக ரூ.10,360 கோடி ஈட்டியுள்ளது. 2022 டிசம்பர் காலாண்டில் ஆக்சிஸ் வங்கியின் ஒட்டு மொத்த திரட்டிய டெபாசிட் 10 சதவீதமும், வழங்கிய கடன் 15 சதவீதமும்  வளர்ச்சி கண்டுள்ளது.

ஆக்சிஸ் வங்கி

2022 டிசம்பர் காலாண்டு நிலவரப்படி ஆக்சிஸ் வங்கியின் மொத்த வாராக் கடன் 2.38 சதவீதமாக குறைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, ஆக்சிஸ் வங்கி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.02 சதவீதம் குறைந்து ரூ.891.70ஆக இருந்தது.