அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் வருவாய் ரூ.9,807 கோடி... லாபம் 6 மடங்கு உயர்வு..

 
லாபத்தை கோட்டை விட்ட ராதா கிஷன் தமானி நிறுவனம்.. அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லாபம் ரூ.40 கோடியாக சரிவு

அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் 2022 ஜூன் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.680 கோடி ஈட்டியுள்ளது. 

டி மார்ட் சங்கிலித்தொடர் சூப்பர்மார்க்கெட் நிறுவனத்தை நடத்தி வரும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் 2022 ஜூன் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.680 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 6 மடங்கு அதிகமாகும். அந்த காலாண்டில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.115 கோடி ஈட்டியிருந்தது.

டி-மார்ட் சூப்பர்மார்க்கெட் உரிமையாளர் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லாபம் ரூ.115.13 கோடி

2022 ஜூன் காலாண்டில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் தனிப்பட்ட வருவாயாக ரூ.9,806.89 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் ஒரு மடங்கு அதிகமாகும். 2021 ஜூன் காலாண்டில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் தனிப்பட்ட முறையில் வருவாயாக ரூ.5,031.75 கோடி ஈட்டியிருந்தது.

டி-மார்ட் சூப்பர்மார்க்கெட் உரிமையாளர் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லாபம் ரூ.115.13 கோடி

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.40 சதவீதம் உயர்ந்து ரூ.3,942.05ஆக இருந்தது.