ஏசியன் பெயிண்டஸ் வருவாய் 55 சதவீதம் வளர்ச்சி.. லாபம் ரூ.1,017 கோடி..

 
வருவாயும் குறைந்தது, லாபமும் குறைந்தது.. கவலையில் ஏசியன் பெயிண்ட்ஸ்

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,016.93 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி பெயிண்ட் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏசியன் பெயிண்ட்ஸ் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,016.93 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 78.9 சதவீதம் அதிகமாகும் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.568.50 கோடி ஈட்டியிருந்தது.

வருவாயும் குறைந்தது, லாபமும் குறைந்தது.. கவலையில் ஏசியன் பெயிண்ட்ஸ்

2022 ஜூன் காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் விற்பனை வாயிலான வருவாயாக ரூ.8,578.88 கோடியாக உள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 55 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் விற்பனை வாயிலான வருவாயாக ரூ.5,534.87 கோடி ஈட்டியிருந்தது. 

ஏசியன் பெயிண்ட்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.12 சதவீதம் உயர்ந்து ரூ.3,332.35ஆக இருந்தது.