விற்பனையில் கலக்கிய அசோக் லேலண்ட், வி.இ. கமர்ஷியல் மற்றும் ஸ்கோடா

 
அசோக் லேலண்ட்

கடந்த டிசம்பரில் அசோக் லேலண்ட், வி.இ. கமர்ஷியல் மற்றும் ஸ்கோடா ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை சிறப்பாக இருந்தது.

வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அசோக் லேலண்ட் கடந்த டிசம்பரில் மொத்தம் 18,138 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 45 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் அசோக் லேலண்ட் நிறுவனம் மொத்தம் 12,518 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. அசோக் லேலண்ட் கடந்த டிசம்பரில் உள்நாட்டில்  17,112 வாகனங்களையும், 1,026 வாகனங்களை ஏற்றுமதியும் செய்து இருந்தது.

வி.இ. கமர்ஷியல் வெஹிகிள்ஸ்

வால்வோ மற்றும் எய்ஷர் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான வி.இ. கமர்ஷியல் வெஹிகிள்ஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 7,221 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 17.3 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் வி.இ. கமர்ஷியல் வெஹிகிள்ஸ் நிறுவனம் மொத்தம் 6,154 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

ஸ்கோடா கார்கள்

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 4,788 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் 48 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் மொத்தம் 3,234 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. 2022ம் ஆண்டில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை 2 மடங்குக்கு மேல் அதிகரித்து 53,721 வாகனங்களாக உயர்ந்துள்ளது.