வர்த்தக துளிகள்.. நடப்பு ஆண்டிலும் கோதுமை மற்றும் கோதுமை பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை தொடரும்..

 
கோதுமை

கோதுமை உற்பத்தி குறைந்ததால் கடந்த ஆண்டு மே மாதம் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்தது. நடப்பு ஆண்டிலும் கோதுமை மற்றும் கோதுமை பொருட்களின் ஏற்றுமதிக்கான தடை தொடரும். நாங்கள் கோதுமை ஏற்றுமதியை அனுமதிக்க மாட்டோம். நாடு முதன்மை ஏற்றுமதியாளர் அல்ல, உபரி இருக்கும்போது மட்டுமே கோதுமை ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மீண்டும் ஒரே மாதத்தில் 1 லட்சம் கார்களை விற்பனை விற்பனை செய்த மாருதி சுசுகி இந்தியா..

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவமான மாருதி சுசுகி இந்தியா, இந்த நிதியாண்டில் இந்தியாவில் விற்பனையாகும் தனது ஒவ்வொரு நான்கு வாகனங்களில் ஒன்று எஸ்.யு.வி. வாகனமாக இருக்கும் என்று மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் எதிர்பார்க்கிறது. நீண்ட காலமாக சிறிய கார்கள் பிரிவில் மாருதி சுசுகி இந்தியா ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சக்திகந்த தாஸ்

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், உலகளாவிய நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில், இந்திய வங்கி அமைப்பு நிலையாக உள்ளது. 2022-23ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 சதவீதத்துக்கு மேல் இருக்கும். சுவிட்சர்லாந்திலும், அமெரிக்காவிலும் வங்கி கொந்தளிப்புக்கு முக்கிய காரணம் உயரும் வட்டி விகிதங்களின் சங்கமம், கடன் போர்ட்போலியாவில் உணரப்படாத இழப்புகள்தான் என்று தெரிவித்தார்.

இந்திய பொருளாதாரம் எதனால் முடங்கியது? ரகுராம் ராஜன் விளக்கம்

2014ம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அதன் கவர்னராக இருந்தபோது, ரிசர்வ் வங்கி ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் நோட்டுகளை அறிமுகப்படுத்த பரிந்துரைத்தது. பணவீக்கத்தால் ரூ.1,000 நோட்டின்  மதிப்பு குறைந்து வருகிறது என்ற காரணத்தால் இந்திய ரிசர்வ் வங்கி இந்த யோசனை முன்வைத்தது.  இந்நிலையில் 2015 செப்டம்பரில் ரகுராம் ராஜன் பேட்டி ஒன்றில் கள்ளநோட்டு அச்சம் காரணமாக பெரிய மதிப்புள்ள கரன்சி நோட்டுகளை வைத்திருப்பது கடினம் என்று கூறியிருந்தார். ரிசர்வ் வங்கியின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்த பிறகு இந்த தகவலை ரகுராம் ராஜன் பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது.