வர்த்தக துளிகள்.. இரு சக்கர மின்சார வாகனங்களுக்கான மானியம் குறைப்பு- மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம்

 
அடுத்தடுத்து தீ பிடிக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியிட்ட OLA நிறுவனம் ..

இரு சக்கர மின்சார வாகனங்களுக்கு தற்போது 40 சதவீதம் மானியம்  (வாகனங்களின் முந்தைய தொழிற்சாலை விலையில்) வழங்கப்படுகிறது. இந்நிலையில், இரு சக்கர மின்சார வாகனங்களுக்கான மானிய தொகை  15 சதவீதமாககுறைக்கப்பட்டுள்ளதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2023 ஜூன் 1ம் தேதியன்று அல்லது அதற்கு பிறகு பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு பொருந்தும். மானியம் குறைக்கப்படுவதால் இரு சக்கர மின்சார வாகனங்களுக்கான விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிடெண்ட்

வேதாந்தா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு நடப்பு 2023-24ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு முதல் இடைக்கால டிவிடெண்ட் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. வேதாந்தா நிறுவனம் இந்த நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.18 முதல் இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளது. ஈக்குவிட்டி பங்குதாரர்களின் உரிமையை நிர்ணயிக்கும் பதிவு தேதி மே 30 அன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

மின்சார வாகனம் சார்ஜிங்

நம் நாட்டில் தற்போது மின்சார வாகனங்களுக்காக தேவை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும், மத்திய அரசும் மின்சார வாகனங்கள் தயாரிப்பை ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில், இந்த தசாப்தத்தின் இறுதிக்குள், மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கான உள்கட்டமைப்பை உருவாக்க இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சுமார் ரூ.80 ஆயிரம் கோடி செலவிடுவார்கள் என்று ஈ.டி.ஐ.ஜி.யின் தரவுகள் கூறுகின்றன.

பி.எஸ்.என்.எல்.

2023 மார்ச் இறுதி நிலவரப்படி, நாட்டின் லேண்ட்லைன் தொலைத்தொடர்பு சேவை பிரிவில் ரிலையன்ஸ் ஜியோ 32.09 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் 25.16 சதவீத சந்தை பங்களிப்புடன் பார்தி ஏர்டெல் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒரு காலத்தில் லேண்ட்லைன் சேவையில் கொடி கட்டி பறந்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் 25 சதவீத சந்தை பங்களிப்பை  கொண்டுள்ளது.