வர்த்தக துளிகள்.. ஜெப்டோவில் ரூ.25 கோடிக்கு மாம்பழங்களை ஆர்டர் செய்த இந்தியர்கள்

 
மாம்பழம் சாப்பிட்ட பிறகு இந்த 5 உணவுகள சாப்பிடாதீங்க… உடலுக்கு ஆபத்து என எச்சரிக்கை!

தற்போது மாம்பழ சீசன் என்பதால் அதன் விற்பனை அமோக இருக்கிறது. பிரபல மளிகை பொருட்கள் விநியோக செயலியான ஜெப்டோ தரவுகளின்படி, இந்தியர்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜெப்டோ செயலியில் மொத்தம் ரூ.25 கோடிக்கு மாம்பழங்களை ஆர்டர் செய்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.60 லட்சம் மதிப்புக்கு மாம்பழங்களை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்துள்ளனர். நடப்பு மே மாதத்தில் மாம்பழ விற்பனை ஏப்ரல் மாத விற்பனையை முறியடிக்கும் என்று கூறப்படுகிறது.

அமேசான் வெப் சர்வீசஸ்

அமேசானின் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவான அமேசான் வெப் சர்வீசஸ், வேகமாக வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவில் அதன் முந்தைய முதலீடுகளை இரப்படிப்பாக்க திட்டமிட்டுள்ளது. அமேசான் வெப் சர்வீசஸ் 2023ம் ஆண்டுக்குள் நம் நாட்டில் ரூ.1.06 லட்சம் கோடி முதலீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் தனது கிளவுட் உள்கட்டமைப்பை உருவாக்கவும், ஆண்டு தோறும் 1 லட்சம் முழு நேர வேலைகளை ஆதரிக்கவும் பயன்படுத்தப்படும் என்று அமேசான் வெப் சர்வீசஸ் தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்து தீ பிடிக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியிட்ட OLA நிறுவனம் ..

இரு சக்கர மின்சார வாகனங்களுக்கு அதன் விற்பனை விலையில் 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், அதிக எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நோக்கில், இரு சக்கர மின்சார வாகனங்களுக்கான மானியத்தை 15 சதவீதமாக குறைக்க உயர்மட்ட அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவுக்கு கனரக தொழில்துறை அமைச்சகம் ஒரு பரிந்துரையை அனுப்பியுள்ளது. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால் இரு சக்கர மின்சார வாகனங்கள் விலை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

“இறக்குமதி வரியை குறைக்க முடியாது” – அடம்பிடிக்கும் மத்திய அரசு; பேக் அடிக்கும் எலான் மஸ்க்கின் டெஸ்லா!

எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம், உள்நாட்டில்  விற்பனை செய்ய மற்றும் ஏற்றுமதி செய்வதற்காக இந்தியாவில் மின்சார கார்களை தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது காரை விற்னை செய்யும் நோக்கில், இறக்குமதி வரியை குறைக்கும்படி மத்திய அரசிடம் போராடி வந்தது. ஆனால் மத்திய அரசு இறக்குமதி வரியை குறைக்க முடியாது என்று உறுதியாக தெரிவித்தது. இதனையடுத்து, இந்தியாவில் மின்சார கார்களை தயாரிக்கும் முடிவை டெஸ்லா நிறுவனம் எடுத்துள்ளது.