வர்த்தக துளிகள்.. ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்த பாலிவுட் நடிகை சில்பா ஷெட்டி..

 
சில்பா ஷெட்டி

விக்ட்குட் பிராண்டின் கீழ் ஆரோக்கியமான உணவு பொருட்களை சந்தைபடுத்தும் ஸ்டார்ட்அப் நிறுவனமான 100 பெர்சென்ட் நூரிஷ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில்  பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி முதலீடு செய்துள்ளார். 100 பெர்சென்ட் நூரிஷ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், நடிகை ஷில்பா ஷெட்டியிடம் இருந்து ரூ.2.25 கோடி முதலீடு  பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

பணவீக்கம்

இந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் தொடர்ந்து 11வது மாதமாக கடந்த ஏப்ரல் மாதத்திலும் குறைந்துள்ளது. 2023 ஏப்ரல் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் -0.92 சதவீதமாக குறைந்துள்ளது. 2023 மார்ச்  மாதத்தில் மொத்தவிலை பணவீக்கம் 1.34 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் நம் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.70 சதவீதமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டில் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது குறிப்பாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு வரம்புகள் உள்ளது. அதேசமயம் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி சரிவு கண்டுள்ளது எனவே இந்த ஆண்டில் வரும் நிதிக் கொள்கை ஆய்வு கூட்டங்களில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாது என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

செபி

அதானி விவகாரத்தை விசாரிக்க 3 மாதங்கள் அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும், செபி கேட்டது போல் 6 மாதங்கள் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இதனையடுத்து, அதானி குழுமத்தின் சாத்தியமான ஒழுங்குமுறை வெளிப்பாடுகளின் குறைபாடுகள் தொடர்பான தனது விசாரணையில் ஏதேனும் தவறான அல்லது முன்கூட்டியே முடிவடைந்தால் அது நீதிக்கு இடையூறாக இருக்கலாம் என்று இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.